எனது முதல் வலைப்பதிவை பூச்சியத்திலிருந்து...

இங்கு பூச்சியங்களைப் பற்றி எழுதும் பொழுது எனக்கு முன்னொரு பொழுது மின்னஞ்சலில் வந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. அதை இப்பதிவில் பார்வைக்கு இணைப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
இணைத்துள்ள இலக்கங்களையும் அதன தமிழ் சொற்களையும் நோக்கும் போது மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்க தமிழ் சொற்கள் இருக்கின்றது. சொற்கள் உருவாவது அதன் பாவனையின் தேவையைப் பொறுத்ததுதானே. எனவே மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் சில தேவையின் காரணமாகவே உருவாகியிருக்க வேண்டும். அப்படியாயின் தமிழில் “முக்கோடி”, “மகாயுகம்” போன்ற இலக்கங்களின் பாவனை எச்சந்தர்ப்பத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதே எனது தேடலாக இருக்கிறது. எவராவது இதுபற்றி அறிவீர்களாயின் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.
7 comments:
Nice starting, keep it up.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
காலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.
வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பதிவை 'இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி'யிலும் இணைக்கலாம்.
தொடக்கமே அமர்களமாய் இருக்கு !!!
வாகீசன்
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
நன்றி செந்தில்
நான் தேடிய முக்கியமான ஒரு விடயத்தை தந்துள்ளிர்கள், மிகவும் பயனுள்ள விடயம்.
Good start...good luck
Post a Comment