Monday, July 20, 2009

எனது முதல் வலைப்பதிவை பூச்சியத்திலிருந்து...

எனது முதலாவது வலைப்பதிவை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். இங்கு நான் பூச்சியங்கள் என்று குறிப்பிடுவது எனது சிந்தனையின் வெளிப்பாடுகளை. இது எனது கன்னி முயற்சியாக இருந்தபோதிலும், எவ்வாறு எனது வலைப்பதிவை பூச்சியங்களின் மூலம் வளமூட்டமுடியும் என்று சிந்தித்த வேளையில், பூச்சியங்களினாலும் வலைப்பதிவை வளமூட்டமுடியும் என்பது எனது சிறு மூளைக்கு எட்டியது. எப்படியென்றால் ஒரு இலக்கத்துக்கு (பூச்சியமல்லாத) பின்னால் பூச்சியங்களை பயன்படுத்தும் போது அந்த இலக்கத்தின் பெறுமதி பத்தின் மடங்குகளால் அதிகரிக்கிறது அல்லவா, இங்கு இலக்கம் என்று நான் குறிப்பிடுவது உண்மைத் தகவல்களை. அவ்விலக்கமும் (பூச்சியமல்லாத) அதனை தெடர்ந்து வரும் பூச்சியங்களும் இணைந்து உருவாக்கும் விளைவான இலக்கமானது, தகவல்களை மையமாக வைத்து சிந்தனைகளின் வெளிப்பாடுகளால் உருவாக்ககூடிய எனது வலைப்பதிவுகளாக கருதுகிறேன்.

இங்கு பூச்சியங்களைப் பற்றி எழுதும் பொழுது எனக்கு முன்னொரு பொழுது மின்னஞ்சலில் வந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. அதை இப்பதிவில் பார்வைக்கு இணைப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.


இணைத்துள்ள இலக்கங்களையும் அதன தமிழ் சொற்களையும் நோக்கும் போது மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்க தமிழ் சொற்கள் இருக்கின்றது. சொற்கள் உருவாவது அதன் பாவனையின் தேவையைப் பொறுத்ததுதானே. எனவே மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் சில தேவையின் காரணமாகவே உருவாகியிருக்க வேண்டும். அப்படியாயின் தமிழில் “முக்கோடி”, “மகாயுகம்” போன்ற இலக்கங்களின் பாவனை எச்சந்தர்ப்பத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதே எனது தேடலாக இருக்கிறது. எவராவது இதுபற்றி அறிவீர்களாயின் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
நன்றி.

  © Blogger template 'A Click Apart' by Ourblogtemplates.com 2008

Back to TOP