எனது முதல் வலைப்பதிவை பூச்சியத்திலிருந்து...

இங்கு பூச்சியங்களைப் பற்றி எழுதும் பொழுது எனக்கு முன்னொரு பொழுது மின்னஞ்சலில் வந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. அதை இப்பதிவில் பார்வைக்கு இணைப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
இணைத்துள்ள இலக்கங்களையும் அதன தமிழ் சொற்களையும் நோக்கும் போது மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்க தமிழ் சொற்கள் இருக்கின்றது. சொற்கள் உருவாவது அதன் பாவனையின் தேவையைப் பொறுத்ததுதானே. எனவே மிகப்பெரிய இலக்கங்களைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் சில தேவையின் காரணமாகவே உருவாகியிருக்க வேண்டும். அப்படியாயின் தமிழில் “முக்கோடி”, “மகாயுகம்” போன்ற இலக்கங்களின் பாவனை எச்சந்தர்ப்பத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதே எனது தேடலாக இருக்கிறது. எவராவது இதுபற்றி அறிவீர்களாயின் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.